“நடுவே வந்த நாத்தனாரை நடு மண்டையில் தாக்கி …”குடும்ப சண்டையில் ஒரு மருமகளால் நடந்த கோரம்

 

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சிக்காம்வி பகுதியில் உள்ள ராஜனகட்டே கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான மஞ்சுளாவும் .இவரது கணவரின் சகோதரி 50 வயதான ஜெயம்மாவும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப சண்டை வருவது வழக்கம் .அப்போதெல்லாம் அந்த மருமகள் அந்த நாத்தனாரை தங்களின் குடும்பத்தில் நடுவே இருந்து கொண்டு பிரச்சினை உண்டு பண்ணுவதால் அவரை வெளியே போக சொல்லி தகராறு செய்வார்
அதன் படி நேற்று மஞ்சுளாவும், ஜெயம்மாவும் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்கள். குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றிருந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த மஞ்சுளாவுக்கும், ஜெயம்மாவுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மஞ்சுளா வீட்டில் கிடந்த ஆயுதத்தை எடுத்து ஜெயம்மாவை தலையில் தாக்கினார் . இதில், பலத்த காயம் அடைந்த ஜெயம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
பின்னர் பயந்து போன மஞ்சுளா மற்றொரு அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சிக்காம்வி போலீசார் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் ஜெயம்மா, மஞ்சுளாவின் உடல்களை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .

Contact Us