“நாலு பெண்களுடன் ஒரே நேரத்தில் டேட்டிங் ..”அடுத்து அந்த வாலிபருக்கு நேர்ந்த கதியை பாருங்க

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் உள்ள ஜோர்பட்கி கிராமத்தில் ஜல்பைகுரி நகரில் சுபமோய் கர் என்ற 30வயதான நபர் வசித்து வருகிறார் .அவர் ஒரு மருந்து கம்பெனியில் விற்பனையாளராக இருந்தார் .இந்நிலையில் அந்த நபர் நான்கு பெண்களை ஒருவருக்கு தெரியாமல் மற்றவரை காதலித்து ஏமாற்றி வந்துள்ளார்.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு அந்த நான்கு பெண்களுக்கும் தாங்கள் ஒருவரைத்தான் காதலிக்கிறோம் ,அந்த கர் தங்களை ஏமாற்றுவதை தெரிந்து கொண்டனர் .அதனால் அந்த நபரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர் .அதனால் அவரோடு நால்வரும் ஒன்றாக டேட்டிங் செல்ல முடிவெடுத்தனர் .அதன்படி ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் அந்த நபரை சந்தித்து டேட்டிங் வந்தனர் .

அப்போது அந்த நான்கு பெண்களும் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாத அந்த நபர் அங்கேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயண்றார் .
பிறகு விஷமருந்தி உயிருக்கு போராடிய அந்த நபரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் ,அந்த மருத்துவனையில் அந்த நபர் உயிருக்கு போராடி சிகிச்ச்சை பெற்று வருகிறார் .இது பற்றி யாரும் இதுவரை போலீசில் புகார் அளிக்கவில்லை .

Contact Us