அமெரிக்காவில் முதல் முறையாக இந்த விருதை பெறும் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி

அமெரிக்காவின் இராணுவ கட்டளை மற்றும் பொதுப் பணியாளர்கள் கல்லூரியின் International Hall of Fame விருது இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவிற்கு, (Mahesh Senanayake) வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி கன்சாஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஃபோர்ட் லீவன்வொர்த் தளத்தில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. மேலும், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, (Mahesh Senanayake) மற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பெர்ரி லிம் செங் இயோவ் Perry Lim Cheng Yeow) ஆகியோருக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டது.

இதேவேளை, இலங்கையில் இந்த விருதைப் பெறும் முதல் நபர் மகேஷ் சேனாநாயக்க ஆவார். தங்களின் தொழில் கண்ணியத்தைப் பாதுகாத்து நாட்டிற்கு அதிகபட்ச சேவையாற்றிய உயர் அதிகாரிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

Contact Us