மன்னாரில் மாவீரர் துயிலுமில்லத்தை உடைத்தது தமிழ் கிறிஸ்தவர்கள்? அம்பலமான கசக்கும் உண்மை!

அண்மையில் மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஒரு கசப்பான செய்தி கிடைத்துள்ளது.

நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மையாக நடந்த சம்பவம், குறித்த ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடத்தை முற்றாக இடித்தது பருப்புக்கடந்தான் கிறிஸ்தவ இளைஞர்கள் என்பது தற்போது கசிந்துள்ள தகவல்.

பருப்புக்கடந்தான் பங்குத்தந்தையின் உத்தரவின் பெயரிலேயே குறித்த அராஜகத்தை நடத்தியுள்ளனர் அந்த கிறிஸ்தவ இளைஞர்கள்.

குறித்த சம்பவத்தை ஏன் பங்குத்தந்தைகள் தலைமையில் கிறிஸ்தவ இளைஞர்கள் செய்தார்களென உங்களுக்கு கேள்வி எழலாம்.

ஆம், குறித்த ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணி அப்பகுதி கிறிஸ்தவர்களின் தேவாலயத்திற்குரியது என இடம்பெயர்ந்து மீள் குடியேறியபோது பங்குத்தந்தைகள் அபகரித்து வைத்திருந்தனர்.

அதன் பின்னர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாவீரர் நாள் நினைவுகூற அனுமதிக்கப்பட்டிருந்தது அப்போது பங்குத்தந்தைகளுடன் முரண்பட்டே தமிழ் தேசிய வாதிகள் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தினர்.

இந்நிலையில்தான் இந்த கோத்தா அரசின் ஆட்சியை பயன்படுத்தி மீளவும் குறித்த காணியை தேவாலயத்திற்கு எடுத்துக்கொள்ளும் நோக்குடன் அங்குள்ள சின்னங்களை உடைத்து அராஜக செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு சிங்கள கிறிஸ்தவ இராணுவ புலனாய்வாளர் ஒருவரின் உதவியையும், அவர்கள் நாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Contact Us