நாங்கள் பிரிந்தது, அதிர்ஷ்டம்!.. -பிரிட்டன் இளவரசர் ஹாரியின் முன்னாள் காதலி என்ன செல்கிறார் பாருங்கள்

ப்ளோரன்ஸ் செயின்ட் ஜார்ஜ் என்ற பிரபல மாடல், பிரிட்டன் இளவரசர் ஹாரியுடன் பழகிய காலகட்டம் குறித்து கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, இளவரசர் ஹாரியுடன் கடந்த 2011-ம் வருடத்தில் டேட்டிங் செய்தேன். அந்த காலகட்டத்தில், எங்களைப் பற்றி ஊடகங்களும் பொதுமக்களும் அதிகம் ஆராய்ந்தனர். இதனால், எங்களது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டது. தினமும் ஒவ்வொரு விதமான கதைகளை பத்திரிக்கைகளில் எழுதுவார்கள். என் பள்ளி தோழர்களிடமும் விசாரித்தனர். மேலும் என் வீட்டின் வாசலில் எந்த நேரமும் புகைப்பட கலைஞர்கள் இருப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

எனினும், அவர்கள் பிரிந்ததற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. தற்போது, ப்ளோரன்ஸிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், ஹாரியுடன் பழகிய காலகட்டத்தில் பயம் மற்றும் கவலையில் இருந்ததாக கூறியிருக்கிறார். கடைசியாக குடும்பத்தார் ஆதரவளித்து ஊக்கப்படுத்தியதோடு, மருத்துவர்களும் உதவிய பின்பே அதிலிருந்து மீண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

அதன்பின்பு, அவருக்கு கோடீஸ்வரரான ஹென்றி செயின்ட் ஜார்ஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. எனினும், தன்னையும் இளவரசர் ஹாரியையும் சேர்த்து வைத்து பேசுவது தொடரும் என்பது எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். அதன்பின்பு எப்படியோ, கடந்த 2019 ஆம் வருடத்தில், ஹாரியின் முன்னாள் காதலி என்று அறியப்படாமல் இருந்தது நிம்மதியளித்ததாக கூறியிருக்கிறார்.

Contact Us