ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி காட்டிய தர்ஷா வீடியோ..

 

இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை தர்ஷா குப்தா. சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் சமீபத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

தற்போது தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வரும் தர்ஷா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தர்ஷா குப்தா நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் தர்ஷா சிவப்பு நிற பிகினி உடையில் ஈரம் சொட்ட சொட்ட தண்ணீரில் நிற்கிறார். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பில்லா திரைப்படத்தில் நயன்தாரா பிகினியில் வருவது போன்று உள்ளது என கமெண்ட் கூறுகின்றனர்.

சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளும் கவர்ச்சி காட்டத் தொடங்கி விட்டனர். ரம்யா பாண்டியன், ஷிவானி வரிசையில் தர்ஷாவும் தற்போது கவர்ச்சி காட்டத் தொடங்கிவிட்டார். இந்த ஹாட் புகைப்படங்களுக்கு சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

Contact Us