இந்த 2 தடுப்பூசிகளையும் கலந்தா இவ்வளவு பலனா….? ஆய்வில் தெரியவந்த சூப்பர் தகவல்…..!!

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியும், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் சேர்ந்து உருவாக்கி, இந்தியாவில் உள்ள புனே சீரம் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் கலந்து செலுத்தி கொள்பவர்களுக்கு 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திருப்பது ஆசியாவின் ஹெல்த்கேர் பவுண்டேசன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

அதாவது, முதல் தவணையாக கோவேக்சின் தடுப்பூசியையும், இரண்டாம் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசியையும் செலுத்துபவர்கள் அல்லது முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசியையும், இரண்டாவது தவணையாக கோவேக்சின் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திருக்கிறது என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

Contact Us